கரூர்- பாஜக மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

கரூர்- பாஜக மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
கரூர்- பாஜக மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட செயலாளர் நட்ராயன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ ஐ டி யு சி மாவட்டச் செயலாளர். ஜி.பி.எஸ் வடிவேலன், மாவட்ட தலைவர் குப்புசாமி, சிபிஐ மாவட்ட துணை செயலாளர் மோகன் குமார், மாவட்ட துணை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது, அதானி நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் விசாரிக்க வேண்டும், மணிப்பூர் கலவரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் விசாரிக்க வேண்டும், உயர்ந்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story