ராமநாதபுரம் பள்ளிக் குழந்தைகளுக்கு மாலை நேர வகுப்புகள் அறிமுகம்

ராமநாதபுரம் பள்ளிக் குழந்தைகளுக்கு மாலை நேர வகுப்புகள்  அறிமுகம்
X
ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு அமிர்தா அம்மையாரின் குழுமத்தின் சார்பாக மாலை நேர வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன
அமிர்தா குழுமமானது கல்வி மட்டுமல்லாது மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் மாதா அமிர்தானந்தமையி அம்மா அவர்களின் ஆசியுடன் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் நோக்கோடு ஆர்.எஸ். மடை ராமநாதபுரம் எம்.கே.நகர் ஜே.ஜே.நகர்ராமேஸ்வரம் ஆகிய மூவிடங்களில் இலவசமாக அமிர்தா ரைட் டியூஷன் சென்டர் அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் உறுதுணையாகத் திகழ்கின்றது. அதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் வேண்டுதலுக்கு இணங்க வழுதூர் மற்றும் வேதாளை ஆகிய இடங்களிலும் இத்திட்டத்தினை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இச்சிறப்பு வகுப்புகளானது மாணவர்களின் கல்வியறிவு, ஆளுமை திறன், விளையாட்டு மற்றும் கையடக்க கணினியை கையாளும் முறை என பல்வேறு விதமான திறன்களையும் ஒருங்கே பெற்று சரளமாக வாசிப்பு மற்றும் எழுதுதல் திறன்களுக்கு வழிவகை செய்கிறது. மாணவர்களின் வாசித்தல் பயிற்சியினை ஊக்குவிக்கும் விதமாக நூலகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story