திருப்பத்தூரில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திருப்பத்தூரில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
X
திருப்பத்தூரில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் மனித உரிமைகள் தின உறுதிமொழியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அரசு துறை அதிகாரிகள் முன்னிலையில் ஏற்றுக்கொண்டார் மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது உலகின் மிக அற்புதமான உலகளாவிய உறுதிமொழிகளில் ஒன்றான மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனத்தின் (UDHR) ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இனம், நிறம், மதம், பாலினம், மொழி, அரசியல் அல்லது பிற கருத்து, தேசிய அல்லது சமூக தோற்றம், சொத்து, பிறப்பு அல்லது பிற அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் - இந்த முக்கிய ஆவணம் ஒரு மனிதனாக அனைவருக்கும் உரிமையுள்ள பிரிக்க முடியாத உரிமைகளை உள்ளடக்கியது. அதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பாகராஜ் மனித உரிமைகள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். இதில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் இந்தியாவில் செயல்படுத்த தக்க பன்னாட்டு சட்டங்களில் வரையறுக்க பட்ட மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும் நடந்து கொள்வேன் எவ்வித வேறுபாடும் இன்றி அனைவரும் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன் என அரசுத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் கடமைகளை ஆற்றுவேன் என உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story