வெள்ளகோவிலில் டிராக்டரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து - அரசுபள்ளி ஆசிரியை மற்றும் அவருடன் சென்ற அதே பள்ளி மாணவி பலி - ஒரு மாணவி காயம் - வெள்ளகோவில் காவல்துறை விசாரணை

வெள்ளகோவிலில் டிராக்டரும் இருசக்கர வாகனமும் மோதியதால் ஏற்பட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு பள்ளி ஆசிரியை மற்றும் அவருடன் சென்ற அதே பள்ளியில் 5ம்வகுப்பு மாணவியும் இறந்து போனது வெள்ளகோவில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மாணவியின் தங்கையும் படுகாயமடைந்து மேல் சிகிச்சை
காங்கயம் வெள்ளகோவில் அருகே வெள்ளகோவில் - செம்மாண்டாம்பாளையம் ரோடு பெரியசாமி நகர் அருகே இன்று TN 47 U 2084 என்ற எண்ணுள்ள Mahindra tractor ஐ அஜித்குமார் (27)த/பெ மாரியப்பன், LKC நகர் வெள்ளகோவில். என்ற நபர் வெள்ளகோவில் செம்மாண்டாம்பாளையத்திலிருந்து கணபதிபாளையம் தன்வந்த்கிரஷர் செல்வதற்காக சென்று கொண்டிருந்தபோது அதே ரோட்டில் அதே திசையில் டிராக்டருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த வெள்ளகோவில் அகலரப்பாளையம் புதூர் அரசு ஆரம்பப்பள்ளி உதவிஆசிரியராக பணிபுரிந்துவரும் சரஸ்வதி (50) க/பெ கணபதி, இந்திராநகர், வெள்ளகோவில் என்பவர் பக்கத்துவீட்டில் தனது தாத்தாவீட்டிற்கு வந்திருந்த அதே பள்ளியில் படித்துவரும் ராகவி(10) த/பெ கார்த்தி, AP புதூர், வெள்ளகோவில், இவரின் தங்கை 2) யாழினி (08) என்கிற ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு மாணவிகளையும் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு அகலரைப்பாளையம் புதூர் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தபோது சம்பவ இடத்தில் தனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த டிராக்டரை முந்திச் செல்ல முயன்ற போது அதே நேரத்தில் டிராக்டரின் ஓட்டுநரும் வலதுபுறமாக சென்றதால் மேற்படி இருசக்கரவாகனமானது டிராக்டரின் பின்புறம் உள்ள டைலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆசிரியை சரஸ்வதி மற்றும் மாணவி ராகவி & யாழினி ஆகிய மூவருக்கும் அடிபட்டதில் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிக்கிச்சைக்கு காங்கேயம் மாவட்ட அரசுமருத்துவமனைக்கு சென்றபோது அங்கு சரஸ்வதி மற்றும் மாணவி ராகவி ஆகியோரை பரிசோதித்த மருத்துவர் தலையில் பலத்த அடிபட்டி இறந்து விட்டதாக தெரிவித்தார். இன்னொரு மாணவியான யாழினிக்கு (08) இருதோள்பட்டையிலும் இரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. மேல்சிகிச்சைக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஒரு பள்ளியில் ஆசிரியர் மற்றும் 5 வகுப்பு மாணவி இறந்தது வெள்ளகோவில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட விபத்து குறித்து சம்பவ இடம் சென்று வெள்ளகோவில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story