கரூரில் ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு பிரச்சார வாகனத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கரூரில் ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு பிரச்சார வாகனத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்.
கரூரில் ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு பிரச்சார வாகனத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், உலக வாசக்டமி இருவார விழாவை முன்னிட்டு, ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆட்சியர் வளாகத்தில் இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார். "குடும்ப கட்டுப்பாடு பற்றி இணைந்தே பேசுவோம். அதனை இன்றைய தொடங்குவோம்" என்ற வாசகத்தை முன்னிறுத்தி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு விழாவை சிறப்பித்தனர். இந்த விழிப்புணர்வு வாகனம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடையே குறிப்பாக, ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டியதின் அவசியமும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story