அரியலூர் பாஜக மாவட்ட தலைவர் அய்யப்பன் திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்கக்கூடிய மத்திய திரைப்பட சான்றிதழின் ஆலோசனை குழு உறுப்பினராக நியமனம்

X
அரியலூர், டிச.10- அரியலூர் மாவட்ட பாஜக தலைவராக அய்யப்பன் இருந்து வருகிறார் இந்நிலையில் இவர் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்கக்கூடிய மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் இவர் இப் பதவியில் அடுத்த மூன்று ஆண்டுகள் ஆலோசனைக்குழு உறுப்பினராக நீடிப்பார். இந்நிலையில் இன்று திருச்சி விமான நிலையத்தில் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதையொட்டி, அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் திரைப்பட சான்றிதழ் வாரியத்தில் ஆலோசனை குழு உறுப்பினராக என்னை நியமனம் செய்த மாநில தலைவர் அண்ணாமலைக்கும் பரிந்துரை செய்த மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்
Next Story

