பரமத்தி வேலூர் அருகே மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.

பரமத்தி  வேலூர் அருகே மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.
X
இன்ஸ்டாகிராம் நண்பரை தேடி திருவண்ணாமலை சென்றபோது கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவிக்கு மருத்துவ பரிசோதனை போக்சோ சட்டத்தில் கைதான 5 வாலிபர்கள் சிறை.
பரமத்தி வேலூர், டிச. 10: நாமக்கல் மாவட்டம், ஜேடர்பா ளையம் அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர், 13 வயது சிறுமி. இவர், அரசு பள் ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார். சில நாட்களுக்கு முன் மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் ஜேடர்பாளையம் புகார் செய்தனர். புகரின் பேரில் போலீசார் மாணவியை தேடிவந்தனர். இதற்கிடையே மாணவி தாயாரின் அவரது மொபைல் போனையும் எடுத்து சென்றுள்ளார். அந்த மொபைல் போன் மூலம் மாணவியின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அவரை மீட்டனர். அந்த மாணவியிடம் நடத்திய விசாரணையில், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் காரணமாக வாலிபர்கள் சிலர் அறிமுகமாகி உள்ளனர். அந்த வாலிபர்கள் ஆசைவார்த்தை கூறி மாணவியை திருவண்ணாமலைக்கு வரவழைத்துள்ளனர். பின் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, மாணவியை மருத்துவ பரிசோதனை செய்துபோலீசார், விடுதியில் தங்க வைத்தனர். தொடர்ந்து ஜேடர்பாளையம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மாணவியை திருவண்ணாமலையை சேர்ந்த விக்னேஷ், 26, ஆகாஷ், 22, இளங் கோவன், 30, சஞ்சய், 20, செல்வகுமரன், 19, ஆகியோர், பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலை சென்ற போலீசார், 5 வாலிபர்க ளையும் போக்சோ சட் டத்தில் நேற்று கைது செய்தனர் சிறையில் அடைத்தனர்.
Next Story