ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

தீர்த்த குடம், முளைப்பாரி, கோபுர கலசம் எடுத்து வரும் நிகழ்ச்சி
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் அருகே ஶ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வரும் 12ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது. அதை ஒட்டி இன்று காலை திருங்கடம்பந்துறை காவிரி நதிக்கரையில் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. மேளதாளத்துடன் காவிரி ஆற்றில் இருந்து கடம்பர் கோவில் வழியாக கோவில் சன்னதி வரை ஊர்வலமாக கோவில் வந்து யாகசாலையில் தீர்த்தம் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 5 மணி அளவில் முளைப்பாரி மற்றும் கோபுர கலசங்கள் கடம்பர் கோவில் வைத்து பூஜை செய்து அங்கிருந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவில் வந்தடைந்தனர். மதுரை தொடர்ந்து இரவு 7 மணியளவில் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. இன்று காலை 11 ஆம் தேதி புதன்கிழமை இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடைபெறுகிறது. வரும் 12 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மேல் நான்காம் கால யாக பூஜை நடைபெற்று காலை 5 மணிக்கு மேல் விமான கோபுரம் மகா கும்பாபிஷேகம், தீபாரதனை, கோ பூஜை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாட்டினை ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோயில் திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்
Next Story