அரியலூரில் ஏஐடியுசிவினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூரில் ஏஐடியுசிவினர் ஆர்ப்பாட்டம்.
X
அரியலூரில் ஏஐடியுசிவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர், டிச.11- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே ஏஐடியுசிவினர் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், திருப்பூரில் மாநகராட்சி வரி உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.ராஜேந்திரன் கையை பிடித்து இழுத்த காவல்துறையை கண்டித்தும், வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த கேட்கப்படும் இடங்களில் அனுமதி வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலர் டி.தண்டபாணி தலைமை வகித்தார். தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு  முழக்கமிட்டனர்.
Next Story