மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

X
ஜெயங்கொண்டம் டிச.11- ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழு , ஜெயங்கொண்டம் ரோஸ் தொண்டு நிறுவனம் மற்றும் அரியலூர் மாவட்ட குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு இணைந்து மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் டிசம்பர் 3ம் தேதி தேசிய மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டும், டிசம்பர் 10 ம் தேதி தேசிய மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டும் நேற்று நடைபெற்றது.வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் பெயரில் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் ஆணையின் பெயரிலும் மாண்புமிகு முதன்மை மாவட்ட தலைமை நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மலர் வாலன்டினா சீரிய வழிகாட்டுதலின் படியும்,ஜெயங்கொண்டம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி முனைவர் லதா தலைமையில் ஜெயங்கொண்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி தமது தலைமை உரையில் மாற்று திறனாளிகள் உலகை மாற்றும் திறனாளிகள் என்றும் பொது மக்கள் தொகையில் 2.5 சதவீதம் மக்கள் மாற்று திறனாளிகளாக இருக்கிறார்கள் என்றும் கூறினார்.மாற்று திறனாளிகளுக்கு என்று 2016 ம் ஆண்டில் சட்டம்இயற்றப்பட்டுள்ளது (Rights of persons with disability act 2016 ன் படி) மாற்று திறனாளிகளுக்கான உரிமைகள் , சட்டம் அவர்களை சமமாக நடத்த படுவதற்கும், பாராபட்சமற்ற முறையில் வாய்ப்புகளை பெறுவதற்கும் துணை செய்கிறது. மேலும் மாற்று திறனாளிகளுக்கு மனித உரிமைகள் மீறல்களில் இருந்தும் வன்கொடுமைகளில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் அவர்கள் குடும்ப சுழல் நிலையை உறுதி செய்யவும், மறுவாழ்விற்கும், தற்சார்புடன் தொழில் தொடங்குவதற்கு தக்க வழிகாட்டியாகவும். இந்த சட்டத்தின் மூலம் செயல் படுத்தபட்டு வருகிறது.தன்னம்பிக்கையின் அடையாளமான மாற்று திறனாளிகள் உயிரோட்டம் கொண்ட பேராளிகள், அவர்களுக்கான உரிமைகள் சட்டத்தில் பாதுகாக்கப்படும் என்று கூறினார். வழக்கறிஞர்கள் வேல்முருகன் பாஸ்கரன் , அரசு வழக்கறிஞர் செந்தில் குமார் மற்றும் அரியலூர் மாவட்ட அனைத்து வகை மாற்று திறனாளிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் செல்வகுமார் கலந்து கொண்டு மாற்று திறனாளிகளுக்கான சட்ட கருத்துரை மற்றும் வட்ட சட்ட பணிகள் குழுவின் செயல்பாடுகளை பற்றி விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.முதலில் ரோஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ஜான் திருநாவுக்கரசு வரவேற்புரை வழங்கினார்.முடிவில் சட்ட தன்னார்வலர் ராஜாஜி நன்றி வழங்கினார்.இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள், ஊர் மக்கள் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். இந்நிகழ்வின் முடிவில் மாற்று திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.மேலும் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் முனைவர் லதா மாற்று திறனாளிகளுக்கு போர்வையை வழங்கினார்.இந்த முகாமினை வட்ட சட்ட பணிகள் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் புனிதா தொகுத்து வழங்கினார் .வட்ட சட்ட பணிகள் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் மற்றும் சட்ட தன்னார்வலர் பிரபாகரன் , ராஜாஜி, வைத்தியலிங்கம் மற்றும் ரோஸ் தொண்டு _நிறுவனத்தினர் ஆகியோர் இம்முகாமினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
Next Story

