டிராக்டர் ட்ரெய்லர் திருட்டு: போலீஸ் விசாரணை

X
கோவில்பட்டியை அருகே டிராக்டர் ட்ரெய்லரை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அருகே வில்லிசேரி பெரிய கிணற்றுத் தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகன் பிரேம்குமார் (53). விவசாயி. இவர் வில்லிசேரிக்குச் செல்லும் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலக பின்புறமுள்ள தனது தோட்டத்தில் டிராக்டர், ட்ரெய்லர், விவசாய உபகரணங்களை வைத்து பராமரிப்பதுடன், அவற்றைப் பயன்படுத்தி வருகிறாராம். இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரின் ட்ரெய்லரை காணவில்லை. உள்ளூர் விவசாயிகள் பயன்பாட்டுக்கு எடுத்துச் சென்றிருப்பார்கள் என பிரேம்குமார் நினைத்திருந்தார். விவசாயிகளிடம் கேட்டபோது, அவர்கள் எடுத்துச் செல்லவில்லை என்பதும், அது திருடுபோனதும் தெரியவந்தது. ட்ரெய்லரை மர்ம நபர்கள் திருடிச் செல்வது, உறவினர் வீட்டிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
Next Story

