சங்கரன்கோவிலில் பாரதியார் ஓவிய படம் வரைந்து பள்ளி மாணவ மாணவிகள் அசத்தினர்

சங்கரன்கோவிலில் பாரதியார் ஓவிய படம் வரைந்து பள்ளி மாணவ மாணவிகள் அசத்தினர்
X
பாரதியார் ஓவிய படம் வரைந்து பள்ளி மாணவ மாணவிகள் அசத்தினர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிய பார்வையின் சார்பாக மகாகவி பாரதியின் 142-வது பிறந்த நாள் தினவிழா சிறப்பு நிகழ்ச்சியாக 1000 மாணவர்களுக்கு மேல் பங்கு பெறும் மகாகவி பாரதியார் ஓவியப்போட்டி ஜக்கி உலக சாதனை புத்தக பதிவிற்கான 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் (Jackhi Book of World Records) நிகழ்ச்சியில் பங்கேற்று பாரதியின் ஓவியம் வரைந்து அசத்தினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் பழனிச்செல்வம் தலைமை வகிக்க, சேவா டிரஸ்ட் செயலாளர் மாரியப்பன், Jackhi Book of world Records நிறுவனர் மற்றும் தலைமை நிரூபர் ஜெகன் ஞானசெல்வம், அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி எஸ்தர் முன்னிலை வகிக்க பாரதி பாடலை வெங்கடேசன் அவர்கள் பாடிட, ரமேஷ்பாபு குறளும் பொருளும் வழங்கிட இன்று ஒரு தகவலை திரு. மாணிக்கவாசகம் வழங்கிட வரவேற்புரையை, துணைத்தலைவர் திரு. இராமச்சந்தின் ஆற்றிட நிகழ்ச்சி சிறப்பாக அரங்கேறியது. ஆசிரியர் ஆறுமுகக்குமார் நன்றியுரை வழங்கினார்.
Next Story