அன்பாக பழகும் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு அரசு பேருந்து மாதிரி வழங்கிய மாணவன்.... நெகழ்ச்சி சம்பவம்....
அன்பாக பழகும் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு அரசு பேருந்து மாதிரி வழங்கிய மாணவன்.... நெகழ்ச்சி சம்பவம்.... நீலகிரி மாவட்டம் உதகை அருகே மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் எட்டாம் வகுப்பு மாணவன் ஸ்ரீசான் மஞ்சூர் கெட்ச்சிகட்டி பகுதி சேர்ந்த பிரவீன் குமாரின் மகன் நாள்தோறும் இரியசிகை உதகை அரசு பேருந்தில் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம். பள்ளி முடித்து அரசு பேருந்து மூலமாக வீட்டிற்கு செல்லும் வழியில் அரசு பேருந்து போன்று சிறிய அளவிலான மாதிரி அரசு பேருந்தை தயாரித்து அன்பாகவும் பாசத்தோடும் பழகி வரும் பேருந்து ஓட்டினர் ஐயனார் மற்றும் நடத்துனரிடம் பரிசாக வழங்கலாம் என கடந்த ஒரு மாதமாக தனக்கு கிடைக்கும் நேரங்களில் அரசு பேருந்து மாதிரி வடிவமைக்க துவங்கினார். முகப்பு விளக்கு, இருக்கை, வண்ணம் தீட்டுதல் போன்றவை சிறப்பாக செய்து மஞ்சூர் பஜார் பகுதியில் பெற்றோர்கள் முன்னிலையில் இரியசீகை அரசு பேருந்து ஓட்டுனர் அய்யனாரிடம் பேருந்து மாதிரியை பரிசாக வழங்கினார். பெற்றுக்கொண்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மாணவனை பாராட்டி இனிப்புகள் வழங்கினர். மொபைல் போனில் விளையாடிக் கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியில் தனது தனித்திறமை ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் சிறிய அளவிலான கருவிகளை உருவாக்குவது என தனி திறமைகளை வெளிப்படுத்தி வரும் ஸ்ரீசான் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Next Story



