கரூர் பரணி பார் பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பாரதியார் வேடம் அணிந்து அணிவகுப்பு.

கரூர் பரணி பார் பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பாரதியார் வேடம் அணிந்து அணிவகுப்பு.
கரூர் பரணி பார் பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பாரதியார் வேடம் அணிந்து அணிவகுப்பு. கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் செயல்படும் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன. நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேசியக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரைப் போல் வேடமிட்டு, தேசியக் கொடி ஏந்தி வருகை தந்தனர். பரணி பார்க் சாரணர் இயக்க ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பாரதியார் வேடமிட்ட குட்டி பாரதிகள், மகாகவி பாரதியார் படத்துக்கு சாரணர் இயக்கத்தின் சார்பில் சிறப்பு வணக்கம் செய்து மரியாதை செய்தனர். பெரும் திரளான சாரண மாணவர்கள் பாரதியார் பாடல் ஒப்பிக்கும் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டு பாரதியார் தேச பக்திப் பாடல்களை உற்சாகத்துடன் பாடினர். பாரதியார் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற அனைவருக்கும் பரணி பார்க் சாரணர் மாவட்டம் சார்பாக பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கரூர் பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் மோகனரங்கன், செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி, கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர்.ராமசுப்பிரமணியன், பரணி பார்க் சாரணர் மாவட்டச் செயலர் பிரியா, கல்விக் குழும முதல்வர்கள் சுதாதேவி, சேகர், முனைவர்.சாந்தி மற்றும் பரணி பார்க் சாரணர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story