மத்திய அரசின் கேக்கத்தான் திட்டத்தில் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த ஆய்வு வகுப்புகள்

எக்ஸெல் பொரியல் கல்லூரியில்மத்திய அரசின் கேக்கத்தான் திட்டத்தில் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த 36 மணிநேர ஆய்வு வகுப்புகள் தொடக்கம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில், (exel)நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024-ன் 7-வது பதிப்பு இன்று தொடங்கியது. இதில், மென்பொருள் பதிப்பு பிரிவில் 21 அணிகளைச் சேர்ந்த 126 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசின் கல்வி அமைச்சகம் புதிய கண்டுபிடிப்புகள் சார்பில், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024 நாடு முழுவதும் 51 நோடல் மையங்களில் ஒரே நேரத்தில் இன்று தொடங்கியது. மென்பொருள் பதிப்பு மற்றும் வன்பொருள் பதிப்பு ஆகிய தலைப்புகளில் 36 மணி நேரம் இடைவிடாமல் நடைபெறுகிறது. வன்பொருள் பதிப்பு இன்று முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் , (EXCEL ENGG. COLLEGE), மென்பொருள் பதிப்பு பிரிவில் தொடங்கிய ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024ல், 21 அணிகளைச் சேர்ந்த 126 மாணவ- மாணவிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஸ்மார்ட் ஹேக்கத்தான் போட்டியில் தமிழ்நாடு, புதுடெல்லி, மேற்குவங்கம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத், உத்தர பிரதேசம், ஒடிசா இராஜஸ்தான், பஞ்சாப் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து வருகை தந்து பங்கேற்று வருகின்றனர். 2 பகல், ஓர் இரவு என 36 மணி நேரம் தொடர்ச்சியாக போட்டிகள் நடைபெறுகின்றன. முன்னதாக, இக்கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததின் காணொலிக் காட்சி இடம் பெற்றது. அதனை அனைவரும் பார்வையிட்டனர். சிறப்பு விருந்தினராக, மனிதவள வல்லுநர் R.K. இராமச்சந்திரன், கல்வியாளர் மற்றும் தொழில் முனைவோர் டாக்டர் A.S.பிரபு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் துணை இயக்குநர் டாக்டர் ஸ்ரீ சாய்ல் சுரேஷ் காம்ப்ல்உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பேசினர். கல்லூரியின் நிறுவனர் தலைவர் டாக்டர் A.K. நடேசன், துணைத் தலைவர் டாக்டர் N. மதன் கார்த்திக், கல்லூரி செயல் இயக்குநர் மற்றும் முதல்வர் டாக்டர் K. பொம்மண்ணராஜா, துறை தலைவர்கள், மதிப்பீடாளர்கள், ஹேக்கத்தான் பங்கேற்பாளர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் துணை இயக்குனர் டாக்டர் ஸ்ரீ சாய்ல் சுரேஷ் காம்ப்ல்கூறும்போது, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024 நிகழ்வுகள் இன்று நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் இந்தியா ஹக்கத்தான் என்பது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் திட்டமாகும். தொலைநோக்கு பார்வையுடன் தொடங்கப்பட்ட ஒரு மாணவர் நிஜ வாழ்க்கைப் பிரச்சனைக்கான தீர்வை உருவாக்க வேண்டும், இது தொழில்நுட்ப சூழ்நிலைகளின் வளர்ச்சியின் விளைவுகளாகும். தொழில்துறை மிகவும் அதிவேக விகிதத்தில் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அதிவேக வளர்ச்சியுடன் நாம் தினசரி புதிய மற்றும் தனித்துவமான சவால்களை தினசரி அடிப்படையில் எதிர்கொள்கிறோம். மேலும் அனைத்து சவால்களும் கூடுதல் கல்வி முறையில் உள்ளடக்கப்படாமல் இருக்கலாம். இடையூறுகளைத் தாண்டி, மாணவர்களிடையே புதுமையாளர்களை வெளிக்கொணர, ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் மூலம் அமைச்சகம் தொடங்கியுள்ளது. தனியார் அரசு மற்றும் தனியார் அரசாங்க அமைப்புகளின் அறிக்கைகளால் மாணவர்கள் பிரச்னைகளை தீர்க்கிறார்கள். இதன்மூலம் மாணவர்களும், சமுதாயமும் பயன்பட முடியும். இதுவரை ஆறு ஏக்கத்தான் பதிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இன்று ஏழாவது ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் பதிப்பு தொடங்கப்பட்டூ, 2 பகல் ஓர் இரவு என மொத்தம் 36 மணி நேரம் போட்டிகள் நடைபெறும். இந்தியா முழுவதும் 51 மையங்களில் இந்த ஹேக் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நடைபெறுகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கான சிந்தனைகளை மேம்படுத்தி பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் காண முடிகிறது என்றும், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் துணை இயக்குனர் டாக்டர் ஸ்ரீ சாய்ல் சுரேஷ் காம்ப்ல் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், கடந்த பதிப்புகளைப் போலவே மாணவர் குழுக்கள்,, அமைச்சகங்கள், துறைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட 17 கருப்பொருளுக்கு எதிராக மாணவர் கண்டுபிடிப்பு பிரிவில் தங்கள் யோசனைகளை சமர்ப்பிக்கிறார்கள். சுகாதாரம், விநியோக சங்கிலி, தளவாடங்கள், நவீன தொழில்நுட்பங்கள், பாரம்பரியம்- கலாச்சாரம், நிலைத்தன்மை, கல்வி மற்றும் திறன் மேம்பாடு, நீர், வேளாண்மை, உணவு வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவை இதில் அடங்கும். இதில் இந்த ஆண்டு பதிப்பில் இஸ்ரோ வழங்கிய சந்திரனில் இருண்ட பகுதிகளின் படங்களை மேம்படுத்துதல், ஜல் சக்தி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு செயற்கைக்கோள் தரவுகள், இணையதளம் சார்ந்த யோசனைகள் மற்றும் மாறும் தன்மை கொண்ட மாதிரிகளை பயன்படுத்தி நிகழ் நேர கங்கை நீர் தர கண்காணிப்பு அமைப்பை உருவாக்குதல், ஆயுஷ் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுவுடன் ஒருங்கிணைந்த நவீன யோகா விரிப்பை உருவாக்குதல் ஆகியவை அடங்கும். நாடு முழுவதும், 51 மையங்களில், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024-ல், 2,247 பதிவுகள் பெறப்பட்டுள்ளன. 1300-க்கும் மேற்பட்ட மாணவர் குழுக்கள் பங்கேற்கின்றனர்.
Next Story