தேசிய மொழிகள் தினம்

தேசிய மொழிகள் தினம்
X
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மொழிகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தேசிய மொழிகள் தினம் கொண்டாடப்பட்டது. 2022ம் ஆண்டு பாரதியாரின் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக மத்திய அரசு அறிவித்தது அதன்படி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி ஓவியப்போட்டி பாரதியார் பாடல் ஒப்பவித்தல் போட்டி நடத்தப்பட்டது. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக மதிப்புமிகு பள்ளி செயலாளர் குமரகுரு, பள்ளித் துணை ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வருகை தந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி விழா பேருரை ஆற்றினார்கள். மன்னர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராமலக்ஷ்மி மற்றும் முத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மேகலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
Next Story