ராமநாதபுரம் வணிகர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

X
ராமநாதபுரத்தில் கடை வாடகையில் மீது 18 சதவீதம் GST வரி விதித்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அரண்மனை முன்பு மாவட்டத் தலைவர் ஜெகதீசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோவிந்தராஜன், ஜீவானந்தம், மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாநில நிர்வாகிகள் இராமப்பாண்டி, சந்திரன், மணிவண்ணன், பெத்திராஜ், முதுகுளத்தூர் நகர் வர்த்தக சங்க செயலாளர் ஜஹீபர் அலி மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்கம், ஹோட்டல், பேக்கரி, மருந்து, மிளகாய், நவதானிய அரிசி வியாபாரிகள் சங்கம் சார்ந்த வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

