காமராஜ் நகரில் லோ பிரசரால் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு.
Karur King 24x7 |11 Dec 2024 2:44 PM GMT
காமராஜ் நகரில் லோ பிரசரால் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு.
காமராஜ் நகரில் லோ பிரசரால் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், வெங்கமேடு காமராஜ் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் வயது 74. இவருக்கு கடந்த 10 வருடங்களாகவே ரத்த அழுத்தம் குறைவாக இருந்து வந்துள்ளது. இதற்காக தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் டிசம்பர் 9-ம் தேதி காலை 6 மணி அளவில், அருகிலுள்ள அவரது உறவினர் தங்கராஜ் என்பவர் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்ததால், தங்கராஜ் மகன் மோகன் வயது 35 என்பவர், உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு செல்வராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மோகன் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த செல்வராஜின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story