ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச தொழில்நுட்ப ஆராய்ச்சி கருத்தரங்கு.
Andippatti King 24x7 |11 Dec 2024 3:11 PM GMT
1122 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் 292 ஆராய்ச்சி கட்டுரைகள் மட்டும் தேர்வாகியுள்ளன.
ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச தொழில்நுட்ப ஆராய்ச்சி கருத்தரங்கு. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் ஐ. இ.இ.இ .சார்பில் நடத்தும் சர்வதேச தொழில் நுட்ப கருத்தரங்கு, கல்லூரி குழும தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது . கல்லூரி துணைத் தலைவர்கள் பிரசன்ன வெங்கடேசன் ,ரேணுகா மோகன், சுதா மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம் மதுரையில் பணிபுரியும் முனைவர் வி. அருள் இ.சி.இ. துறைத்தலைவர் சிறப்புரையாற்றினார். தமிழகம் உள்பட வெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த, பொறியியல் கல்லூரியில் இருந்து, இயற்பியல் ,கணினியியல் , கட்டிடவியல்,மின்னணுவியல், தொடர்பு துறை ,மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இக்கருத்தரங்கில் மொத்தம் 1122 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் 292 ஆராய்ச்சி கட்டுரைகள் மட்டும் தேர்வாகியுள்ளன. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருள்குமார் வரவேற்று பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் முனைவர் பவுன்ராஜ் செய்திருந்தார். விழாவிற்கு முதுநிலை கணினி பயன்பாடு துறைத்தலைவர் முனைவர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார். விழாவில் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டது.
Next Story