அமராவதி ஆற்று படுகையில் தந்தை இறந்த தூக்கத்தில் மகன் மது போதையில் தூக்கிட்டு தற்கொலை.

அமராவதி ஆற்று படுகையில் தந்தை இறந்த தூக்கத்தில் மகன் மது போதையில் தூக்கிட்டு தற்கொலை.
அமராவதி ஆற்று படுகையில் தந்தை இறந்த தூக்கத்தில் மகன் மது போதையில் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, வ உ சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் தமிழரசன் வயது 48. இவரது தந்தை வேலுச்சாமி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திடீரென காலமாகிவிட்டார். தனது தந்தை காலம் ஆகிவிட்டதால் அதிர்ச்சி அடைந்த தமிழரசன் அன்றிலிருந்து மது போதைக்கு அடிமையானார். இந்நிலையில் டிசம்பர் 10ஆம் தேதி காலை 6- மணியில் இருந்து 9- மணிக்குள்ளான இடைப்பட்ட நேரத்தில், குழந்தானூர் பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டுக்கு பின்புறம் உள்ள அமராவதி ஆற்று படுகைக்கு மதுபோதையில் சென்ற தமிழரசன் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் தமிழரசனின் மனைவி பிச்சையம்மாளுக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த தமிழரசனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.
Next Story