ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொள்ளும் நாட்டியாஞ்சலி நடைபெறுவதாக ஜீயர் பேட்டி....*

ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொள்ளும் நாட்டியாஞ்சலி நடைபெறுவதாக ஜீயர் பேட்டி....*
X
ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொள்ளும் நாட்டியாஞ்சலி நடைபெறுவதாக ஜீயர் பேட்டி....*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொள்ளும் நாட்டியாஞ்சலி நடைபெறுவதாக ஜீயர் பேட்டி.... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் முன்பு உள்ள ஆடிப்பூர கொட்டகையில் இளையராஜா கலந்து கொள்ளும் நாட்டியாஞ்சலி நடைபெற இருப்பதாக மணவாள மாமுனிகள் ஜீயர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீ ஆண்டாள் இயற்றிய திருப்பாவை மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு இசையமைத்துள்ளார்.இது தொடர்பான வெளியீட்டு விழா வரும் 15ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சன்னதியில் நடைபெற உள்ளது. ஹைதராபாத் திரிதண்டி சின்ன ஜியர் என்று அழைக்கப்படும் நாராயண ராமானுஜர் வெளியிட அதை ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தைச் சேர்ந்த சடகோப ராமானுஜ ஜீயர் பெற்றுக்கொள்கிறார். தொடர்ந்து நடைபெறும் இளையராஜா இசையமைத்த பாடல்கள் மூலம் ஸ்ரீ ஆண்டாளுக்கு நாட்டியஞ்சலி நடைபெறுகிறது. இசையமைப்பாளர் இளையராஜா இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க இருப்பதாக மணவாள மாமுனீகள் ஜீயர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதையொட்டி விழா ஏற்பாட்டளர்கள் நிகழ்ச்சிக்கான ஆயத்த பணிகளை செய்து வருகின்றனர்.
Next Story