மாவட்டத்தில் பரவலாக பல்வேறு பகுதியில் இடைவிடாத சாரல் மழை

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய சாரல் மழை தொலைந்து வருகிறது இதனால் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது
தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட முழுவதும் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பரவலாக தர்மபுரி,அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், நல்லம்பள்ளி,பென்னாகரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பொழிய துவங்கியது. மேலும் விடியற்காலை முதல் பரவலாக பல்வேறு பகுதிகளில் கனமழை தற்போது வரை பொழிந்து வருவது குறிப்பிடத்தக்கது மேலும் ஒரு சில இடங்களில் மழையுடன் கூடிய பனிப்பொழிவும் அதிகரித்து காணப்படுவதால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது
Next Story