துறைமுக சாலையில் கடும் புகை மூட்டம் : வாகன ஓட்டிகள் அவதி!
Thoothukudi King 24x7 |12 Dec 2024 2:57 AM GMT
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறிய கரும் புகை, குடியிருப்பு பகுதியில் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறிய கரும் புகை, குடியிருப்பு பகுதியில் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 யூனிட்டுகள் மூலம் சராசரியாக 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் புகை காரணமாக சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் இன்று பிற்பகலில் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. இதனால் அனல்மின் நிலையத்தில் இருந்து புகை மேலே செல்ல முடியாமல் அனல்மின் நிலையம் மற்றும் தெர்மல் நகர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்து அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாக காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
Next Story