கோபி அருகே பரிதாபம்
Erode King 24x7 |12 Dec 2024 3:31 AM GMT
பட்டதாரி பெண் தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்துள்ள கள்ளிப்பட்டி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (43). இவரது கணவர் சக்திவேல். இவர்களுக்கு மோகனா ஸ்ரீ (22) என்ற மகளும், தீபக் வெங்கட் (19) என்ற மகனும் உள்ளனர். ராஜேஸ்வரி, கள்ளிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். கணவர் சக்திவேல் கோபியில் உள்ள தனியார் போக்குவரத்து அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் மோகனா ஸ்ரீ பி.எஸ்சி., படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று மதியம் மகன் தீபக் வெங்கட் பரீட்சை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது. பலமுறை தட்டியும் கதவு திறக்காததால் அவர் கதவின் இடைவெளியில் பார்த்துள்ளார். அப்போது ஸ்டூல் ஒன்று கீழே விழுந்து கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீபக் வெங்கட் கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, போர்டிகோ பகுதியில் உள்ள இரும்பு ஆங்கில் ஒன்றில் சேலையால் தூக்கிட்ட நிலையில் மோகனா ஸ்ரீ தொங்கிக் கொண்டிருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே மோகனா ஸ்ரீ இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து, பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story