கடையநல்லூரில் பள்ளத்தில் பாய்ந்த கார் விபத்து

கடையநல்லூரில்  பள்ளத்தில் பாய்ந்த கார் விபத்து
பள்ளத்தில் பாய்ந்த கார் விபத்து
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புன்னையாபுரம் சிங்கிலிபட்டி ரோட்டில் நேற்று மாலையில் செங்கோட்டையை சேர்ந்த தம்பதிகள் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் அத்தம்பதியினர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story