மின் கம்பம் விழுந்து பெண் காயம் : அமைச்சர் கீதா ஜீவன்ஆறுதல்
Thoothukudi King 24x7 |12 Dec 2024 5:11 AM GMT
தூத்துக்குடியில் மின் கம்பம் சரிந்து விழுந்த விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்ணை சந்தித்து அமைச்சர் பெ. கீதா ஜீவன் ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடியில் மின் கம்பம் சரிந்து விழுந்த விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்ணை சந்தித்து அமைச்சர் பெ. கீதா ஜீவன் ஆறுதல் கூறினார். தூத்துக்குடி அம்பேத்கர் நகர் சுந்தரவேல்புரம் மேற்குப் பகுதியில் சேதமடைந்த நிலையிலிருந்த மின்கம்பம் உடைந்து விழுந்ததாம். இதனால், அடுத்தடுத்த 3 மின்கம்பங்களும் சாலையில் சரிந்து விழுந்தன. அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த தேன்மொழி (27), மாலா ஆகியோர் வயர்கள் பட்டதில் கீழே விழுந்தனர். அவர்களில், மாலா காயமின்றி தப்பினார். தேன்மொழி காயமடைந்தார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்றுவரும் தேன்மொழியை சமூகநலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதாஜீவன் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். திமுக மாநகரச் செயலர் ஆனந்தசேகரன், அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெபமணி உள்ளிடோர் உடனிருந்தனர்.
Next Story