கார் டிரைவர் மீது தாக்குதல்: அண்ணன், தம்பி கைது
Thoothukudi King 24x7 |12 Dec 2024 5:14 AM GMT
சாத்தான்குளம் அருகே கார் டிரைவரை தாக்கியதாக அண்ணன், தம்பியை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
சாத்தான்குளம் அருகே கார் டிரைவரை தாக்கியதாக அண்ணன், தம்பியை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பண்டாரபுரம் கிருபாபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபல் மகன் முத்துராஜ்(35). இவர், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று ஊருக்கு வந்த அவர் பண்டாரபுரம் சந்திப்பில் உள்ள கடையில் பொருள் வாங்குவதற்குச் சென்றபோது, அவரது உறவினர்களான அதே ஊரைச் சேர்ந்த தானியேல் மகன்கள் ஜம்பு (40), ஜெயரத்தின ஸ்டாலின் (50), ஜான் கென்னடி ஆகியோர் முத்துராஜிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதில் சகோதரர்கள் 3 பேரும் சேர்ந்து முத்துராஜை தாக்கினராம். இதில் காயமடைந்த முத்துராஜ், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் வழக்குப்பதிந்தார். காவல் ஆய்வாளர் (பொறுப்பு) நாககுமாரி விசாரணை நடத்தி ஜம்பு, ஜெயரத்தின ஸ்டாலின் ஆகிய இருவரையும் கைது செய்தார். ஜான் கென்னடியை தேடி வருகின்றார்.
Next Story