நீலகீரி மாவட்ட இயற்க்கை விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பு
விவசாய நிலங்களில் தேனீ வளர்ப்பு மூலம் ஏற்படும் மகரந்த சேர்க்கையினால் விளைச்சலை அதிகரிக்க தேசிய தேனீ வாரியத்தின் நிதியுதவியுடன் நீலகீரி மாவட்ட இயற்க்கை விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கபட்டது..... நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறி சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. சுமார் 7000 ஹெக்டர் பரப்பளவில் கேரட்,பீட்ரூட்,உருளைகிழங்கு,முட்டைகோஸ்,பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறி சாகுபடி செய்யபடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதால் மண்வளம் குறைந்துள்ளது.எனவே மண் வளத்தை பாதுகாக்கும் வகையில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள விவசாயிகளை மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியதை தொடர்ந்து ஏராளமான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறி உள்ளனர். இருப்பினும் இயற்கை விவசாயத்தில் விளைச்சல் குறைவாகவே உள்ளது. எனவே தேனீ வளர்பின் மூலம் ஏற்படும் மகரந்த சேர்க்கையினால் விளைச்சலை அதிகரிக்கும் வகையில் இயற்கை விவசாயிகள் தேனீ வளர்க்க மத்திய அரசு நிறுவனமான KVK(கிருஷி விக்யான் கேந்திரா) தமிழ்நாடு வேளான் பல்கலைகழகம் மூலம் தேசிய தேனீ வாரியத்தின் நிதி உதவியுடன் 100% மானியத்தில் தேனீ வளர்ப்பு பெட்டிகள்,நேனீக்கள் மற்றும் உபகரணங்களை வழங்கியுள்ளது. மேலும் தேனீ வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விவசாயிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உதகையில் 2 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கபட்டது. இந்த பயிற்சியில் தேனீ வளர்ப்பின் அவசியம், பயன்கள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் உப பொருட்களை விற்பதன் மூலம் கிடைக்கும் கூடுதல் லாபம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
Next Story