நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர் , உதகை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர் , உதகை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை... கோத்தகிரியில் இருந்து குன்னூர்,உதகை மலைப்பாதை சாலைகளில் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பகல் நேரங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி வாகனங்களை இயக்கி சென்றனர்... காலநிலை மாற்றத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது... தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் உதகை,குன்னூர், கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒருசில இடங்களில் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் உதகை,குன்னூர்,கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வந்தது.தொடர்ந்து இன்று காலை முதலே உதகை,குன்னூர், கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய மிதமான சாரல் மழை பெய்து வருகிறது.சாரல் மழை,மேகமூட்டம் காரணமாக கோத்தகிரியில் இருந்து உதகை, குன்னூர் செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வெஸ்ட்புரூக்,கட்டபெட்டு,பாக்கியநகர், அம்பேத்கர் நகர்,பேரார்,மைனலை உள்ளிட்ட பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கோத்தகிரி, உதகை, குன்னூர் செல்லக்கூடிய மலைப்பாதையில் சாலைகளில் மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டு வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை அடையாளம் கண்டு கொள்ள வாகனங்களில் முகப்பு விளக்குகள் மற்றும் இருபுற திசை விளக்குகளை ஒளிரவிட்டப்படி வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.தொடர்ந்து காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடும் குளிர் நிலவி வரும் நிலையில் பொதுமக்கள்,பள்ளி,கல்லூரி மாணவர்கள்,சாலையோர வியாபாரிகள் கடும் குளிரில் தங்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story