வனத்துறையினர் இரவு பகலாக காட்டு யானைகளை விரட்டும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்......

வனத்துறையினர் இரவு பகலாக காட்டு யானைகளை விரட்டும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்......
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த இரண்டு வாரங்களாக முகாமிட்டுள்ள ஆறு காட்டு யானைகள் குன்னூர் வனத்துறையினர் மற்றும் குந்தா வனத்துறையினர் இரவு பகலாக காட்டு யானைகளை விரட்டும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்...... சமவெளி பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் ஆண்டுதோறும் மலை மாவட்டத்தை நோக்கி வருவது வழக்கம் இந்நிலையில் மஞ்சூர் அருகே உள்ள கெத்தை பகுதியில் இருந்து குட்டியுடன் கூடிய 6 காட்டு யானைகள் கொலக்கம்பை டெரமியா மற்றும் தூதூர்மட்டம் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக முகாமிட்டு சுற்றி திரிகிறது இதனைத் தொடர்ந்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் ஒரு குழுவும் குந்தா வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் ஒரு குழுவும் கூட்டு முயற்சியில் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் இரவும் பகலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் பாதுகாப்பாக செல்ல வேண்டுமென வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
Next Story