தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் இ,ஐ,க,கட்சி மாநில செயலாளர் பேட்டி
Sankarankoil King 24x7 |12 Dec 2024 6:04 AM GMT
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் இ,ஐ,க,கட்சி மாநில செயலாளர் பேட்டி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உள்ள தனியார் திருமண மஹாலில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்திய அரசியல் சட்டத்தின் படி வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். செண்பகவல்லி அணை கால்வாய் உடைப்பை சீரமைக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் வனவிலங்குகள் விவசாய நிலங்களில் பரவிக் கிடக்கும் காட்டுப் பன்றிகள், மான்கள் ஆகிய வனவிலங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும். காட்டு பன்றியை வனவிலங்குகள் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும். வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்த பட்சம் ரூபாய் 30,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கேரளாவிற்கு கனிம வளங்களை கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் கேரளாவில் இருந்து வரும் பல குப்பை கழிவுகளை தென் மாவட்டங்களில் கொட்டுவதை நிறுத்த வேண்டும் ஆகிய ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி 2025 ஜனவரி 30 ஆம் தேதி காந்திஜி நினைவு நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் நான்கு நாள் வாகன பிரச்சாரம் செய்யப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் பல தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கை கூறப்பட்டது. தேர்தல் சமயங்களில் கனிமொழி எம்பி பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று கூறி தமிழக முழுவதும் பிரச்சாரம் செய்தார். ஆனால் அதனை திமுக நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளது. தினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஆகிய குற்ற செயல் செய்திகள் தினசரி நாளிதழ்களில் வந்து கொண்டுள்ளது எனக் கூறினார்.
Next Story