மொளகரம் பட்டி அருகே எதிர்கொள்ளும் ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தை கடக்கும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள்!

மொளகரம் பட்டி அருகே எதிர்கொள்ளும் ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தை கடக்கும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள்!
திருப்பத்தூர் மாவட்டம் மொளகரம் பட்டி அருகே எதிர்கொள்ளும் ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தை கடக்கும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள்! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மொலகரம்பட்டி பகுதியில் சிலவருடங்களுக்கு முன்பு ரயில்வே சுரங்கப் பாதை கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது மழைகாலங்களில் இந்த சுரங்க பாதையில் சுமார் 4 அடி உயரம் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமமாக உள்ளன இந்த பகுதியில் 20 க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளது இந்த சுரங்க பாதை வழியாக தான் பள்ளிக்கு செல்லவும் பொதுமக்கள் பணிகளுக்கு செல்லவும் விவசாய நிலங்களில் விளையும் காய் கீரை உள்ளிட்ட விளைபொருட்கள் விற்க கொண்டு செல்லவும் இந்த வழியாக தான் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லவேண்டிய நிலை உள்ளது இல்லை என்றால் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றி செல்லவேண்டிய நிலை உள்ளது பொதுமக்கள் கூறுகையில் இந்த ரயில்வே சுரங்க பாதை வழியாக தான் பல்வேறு கிராமங்களுக்கு ஊர்களுக்கு செல்ல பிரதான சாலையாக திகழ்ந்து வருகிறது மழை காலங்களில் சுமார் 4 அடி வரை மழை நீர் தேங்கி நிற்கின்றது பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பொதுமக்கள் ரயில்வே தண்டவாளத்தை கடந்து தான் செல்லவேண்டும் இந்நிலையில் பள்ளிவாகனங்கள் செல்ல வழி இல்லாமல் தண்டவாளத்தை கடந்து தான் பிள்ளைகளை பள்ளிக்கு ஆட்டோ மூலம் அனுப்பவேண்டிய நிலையில் உள்ளது சுரங்க பாதையில் தேங்கி நிற்கும் மழை நீரை மின் மோட்டார் மூலம் அப்பரப்புற படுத்தினாலும் சில மணி நேரங்களில் சுவற்றின் பக்கவாட்டில் ஊற்று தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி மீண்டும் தண்ணீர் நிரம்பி விடுகின்றது அறுகாமையால் நீர் நிலைகள் உயர்ந்துள்ளது ஆதலால் பக்கவாட்டில் உள்ள சுவருகளின் அங்கங்கே தண்ணீர் உற்று பொங்கி வருகின்றது இதை துறை சேர்ந்த அரசு அதிகாரிகள் இந்த ஊற்று தண்ணிரை நிறுத்த வழிவகை செய்து நிரந்தரமான தீர்வு காணவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் பேட்டி_(001)ராஜேந்திரன் ஊர் பொதுமக்கள் பேட்டி (02) இக்பாருக் வாகன ஓட்டிகள்
Next Story