கோடங்கிபட்டி வீரராக்கியம் பகுதியில் பாலம் கட்டுப்பணிகள் விரைவில் தொடக்கம். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்.
Karur King 24x7 |12 Dec 2024 7:14 AM GMT
கோடங்கிபட்டி வீரராக்கியம் பகுதியில் பாலம் கட்டுப்பணிகள் விரைவில் தொடக்கம். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்.
கோடங்கிபட்டி வீரராக்கியம் பகுதியில் பாலம் கட்டுப்பணிகள் விரைவில் தொடக்கம். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல். கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிபட்டி மற்றும் வீரராக்கியம் ஆகிய இடங்களில் பாலம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோடங்கிபட்டி மற்றும் வீரராக்கியம் பிரிவு பகுதிகளில் கிராமங்களில் இருந்து செல்லும் இணைப்பு சாலைகள் உள்ளது. அந்த சாலையை கடந்து செல்லும்போது, விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்து உள்ளனர். விபத்து நடக்கும் போதெல்லாம் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இதனால் இந்த சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். இந்த சூழலை மாற்றுவதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் கோடங்கிபட்டி மற்றும் வீரராக்கியம் ஆகிய இடங்களில் உயர் மட்ட பாலம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோடங்கிபட்டியில் 21.50 கோடி ரூபாய் மதிப்பில் 5.5 மீட்டர் உயரம், 15 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டப்படும். கோடங்கிப்பட்டியில் சாலையோரம் கிணறு ஒன்று உள்ளது. அதை மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கிணறு மூடப்பட்ட பின் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல, வீரராக்கியத்தில் 18.50 கோடி ரூபாய் மதிப்பில் 5.5 மீட்டர் உயரம், 12 மீட்டர் அகலத்தில் பாலப்பணிகள் நடக்க உள்ளது. இங்கு மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.அது முடிந்தவுடன் பணிகள் தொடங்கும் எனவும், இரண்டு பாலங்களிலும் சர்வீஸ் சாலை, மழை நீர் வடிகால் வசதி போன்றவை ஏற்படுத்தப்படுகிறது. இரு பாலங்களின் பணிகளை ஓராண்டுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story