புதிய வகுப்பறைகளை திறந்து வைத்த எம்எல்ஏ

மதுரை திருமலை நாயக்கர் மகால் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளை எம்எல்ஏ பூமிநாதன் திறந்து வைத்தார்.
மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 47 வது வார்டு மஹால் பகுதியில் உள்ள திருவள்ளுவர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளை இன்று (டிச.12) பூமிநாதன் எம்எல்ஏ திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மேயர் இந்திராணி பொன்வசந்த்., மாநகராட்சி துணைமேயர் நாகராஜன்.,மண்டல தலைவர் முகேஷ் சர்மா., 47 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சகோதரி பானு முபாரக்மந்திரி., மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன். மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையர் சாந்தி., மாநகராட்சி கல்வி அலுவலர் ரகுபதி., உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன்., உதவிப்பொறியாளர் சர்புதீன்., பள்ளியின் தலைமை ஆசிரியர்., ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Next Story