குடியிருப்புகளில் சூழ்ந்த மழை நீர் பொதுமக்கள் கடும் அவதி.
Maduranthakam King 24x7 |12 Dec 2024 8:21 AM GMT
குடியிருப்புகளில் சூழ்ந்த மழை நீர் பொதுமக்கள் கடும் அவதி.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீராமுலு நகர் பகுதியில் அதிகாலை முதல் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் காய்கறி மளிகை வாங்குவதற்கு கூட வெளியே வர முடியாத சூழலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் மின்மாற்றி நீரில் மூழ்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி, குடிநீர் குழாய் வசதி,சிறு மின்விசை தொட்டி பயன்பாட்டில் இல்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர். ஆகவேஅச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story