சனாதனம் என்பது சமத்துவம் -   கவர்னர் ஆர் என் ரவி தகவல்

சனாதனம் என்பது சமத்துவம் -   கவர்னர் ஆர் என் ரவி தகவல்
தென்தாமரைகுளத்தில்
கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைகுளம் வைகுண்ட சாமி பதியில் இன்று அய்யா வைகுண்ட சாமி எழுதிய அகில திருட்டு அம்மனை உதய தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழர் கவர்னர் ஆர் என் ரவி கலந்து கொண்டார். அங்கு அய்யா அகிலத்திரட்டு ஆராய்ச்சி மைய கட்டிடத்திற்கு கவர்னர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து மரக்கன்று நட்டார். தொடர்ந்து அகிலத்திரட்டு அம்மனையை கையால் தொட்டு கும்பிட்ட கவர்னர் ரவி அகிலத்திரட்டு உதய தின ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.            தொடர்ந்து அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழாவில் கலந்து கொண்டு,   அகிலத் திரட்டு அம்மானை நூலை கவர்னர் வெளியிட்டு கவர்னர் பேசியதாவது:- நான் இரண்டு வருடம் முன்பு சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி  தலைமை பதிக்கு வந்து அய்யாவின் ஆசி பெற்று, மூன்றாவது முறையாக தற்போது வந்துள்ளேன். இது மகிழ்ச்சியாக உள்ளது. எப்போதெல்லாம் சனாதன தர்மத்திற்கு ஆபத்து ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நாராயணன் இங்கு அவதரிக்கிறார் என்பது நம்முடைய புனித நூல் கூறும் உறுதியான செய்தி. உயர்வு, தாழ்வு இல்லை அனைவரும் சமம் என சனாதனம் அறிவுறுத்துகிறது. சனாதன கோட்பாட்டிற்கு வெளியே யாரும் இல்லை. நம்பாதவர்கள் கூட அந்த கோட்பாட்டின் கீழ் தான் வருகின்றனர்.        மற்ற வழிபாடுகளை இகழ்ந்து பேசுவது சனாதனத்தில் இல்லை. சனாதனம் என்பது சமத்துவம். பல பாஷைகள், உடை, உணவு, பல வழிபாடு முறை இருந்தாலும் அனைவரும் ஒரே குடும்பத்தில் உறுப்பினர் என்பதே சனாதனத்தின் கோட்பாடு என்று கூறினார்.
Next Story