அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள்
Sivagangai King 24x7 |12 Dec 2024 10:25 AM GMT
சிவகங்கை மாவட்டம், பொது விநியோகத்திட்டத்தின் கீழ் மாவட்ட முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது
சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத்திட்டத்தில் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் வருகின்ற 14.12.2024 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை சிவகங்கை மாவட்ட முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை, கைப்பேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கும் பொருட்டும் பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story