ரெட் கலர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

ரெட் கலர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக பல்வேறு பகுதிகளில் 97 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்தார்‌
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தாமிரபரணி ஆற்றுக் கரையோர பகுதிகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கு நீர் வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை வேளாண்மை துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்டம் முழுவதும் வெள்ள தடுப்பு பணிகளுக்காக 3000 முதல் நிலை பொறுப்பாளர்கள் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தகவல் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது மேலும் தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை விடுத்துள்ளது இதன் காரணமாக தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தற்போது இருந்து வானம் இருள் சூழ்ந்த நிலையில் மழை பெய்ய துவங்கி உள்ளது இந்நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு மழை எச்சரிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்டம் முழுவதும் கடற்கரை கிராமங்களில் உள்ள 41 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு 3000 முதல் நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் மேலும் மீட்பு குழுவினர் உள்ளிட்டடோர் தயார் நிலையில் இருப்பதாகவும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக பல்வேறு 97 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தாமிரபரணி ஆற்றுக் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது கால்நடைகளையும் ஆற்றில் இறங்கக்கூடாது என வருவாய் துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை வேளாண்மை துறை உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது மேலும் அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 639 குளங்களில் 32 குளங்கள் 70% நிரம்பியுள்ள நிலையில் ஓட்டப்பிடாரம் பகுதியில் இரண்டு குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளது குளங்களுக்கு வரும் நீரின் வரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்
Next Story