தூத்துக்குடியில் தொடர் மழை: சாலைகளில் வெள்ளம்!
Thoothukudi King 24x7 |12 Dec 2024 12:48 PM GMT
தூத்துக்குடியில் நேற்று இரவு தொடங்கி பெய்து வரும் தொடர் மழையால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தூத்துக்குடியில் நேற்று இரவு தொடங்கி பெய்து வரும் தொடர் மழையால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பழைய மாநகராட்சி அலுவலகம் உட்பட நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல சாலைகள், தெருக்களில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோன்று மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 76.50 மிமீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வைப்பாரில் 25.00 மி.மீ., மழை பதிவானது. தூத்துக்குடியில் 6.8, ஸ்ரீவைகுண்டம் 3.30, கோவில்பட்டி 3, எட்டயபுரம் 12.20, விளாத்திகுளம் 12, காடல்குடி 6, சூரங்குடி 8மமீ மழை பெய்துள்ளது.
Next Story