நலத்திட்ட உதவிகளை வழங்கிய திமுகவினர்.
Madurai King 24x7 |12 Dec 2024 1:21 PM GMT
மதுரை அருகே பெருங்குடியில் 980 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை திமுகவினர் வழங்கினார்கள்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றியத்தில் இன்று (டிச 12) மதுரை தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கா.சக்தி வைரவன் ஏற்பாட்டில் பெருங்குடி விமான நிலைய சாலையில் திமுக இரு வண்ணக் கொடியேற்றி அருகிலுள்ள உள்ள கலைஞர் திடலில் தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் என 980 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார் . இந்நிகழ்வில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி தலைமை பார்வையாளர், மாவட்டக் கழக நிர்வாகிகள், மாநில சார்பு அணி நிர்வாகிகள், திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றிய, நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story