மாயனூர்- காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
Karur King 24x7 |12 Dec 2024 1:49 PM GMT
மாயனூர்- காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
மாயனூர்- காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு. தமிழகத்தில் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்தது. கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணைக்கு காவிரியில் நேற்று 1371 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், நீர்வரத்து அதிகரித்து இன்று 4321 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் 4121 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 200 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் உள்ளிட்ட கிளை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. மேலும், கரூர் மாவட்டத்தில் பரவலாக நேற்று இரவு முதல் லேசான முதல், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
Next Story