சென்னிமலையில் தேர் முகூர்த்த விழா
Erode King 24x7 |12 Dec 2024 1:52 PM GMT
சென்னிமலை முருகன் கோயிலில் அடுத்த ஆண்டின் தைப்பூச தேரோட்டம்
சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தேர்த்திருவிழா 15 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.அதன்படி வருகிற 2025-ம் ஆண்டுக்கான தைப்பூச தேரோட்டம் பிப்ரவரி மாதம் 11-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை தொடங்கும் வகையில் தேர் முகூர்த்த விழா நேற்று சென்னிமலை கைலாசாநாதர் கோவிலில் நடைபெற்றது.இதற்காக கோபூஜை, விநாயகர் வழிபாடு, புண்யாகவாசகம், பஞ்சகவ்ய பூஜைகள் ஆகியவை நடந்தது. அதைத்தொடர்ந்து முருகப்பெருமானின் வேல் மற்றும் கைலாசநாதர், அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.பின்னர் தைப்பூச தேருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பின்னர் தேர் திருவிழா நடைபெறுவது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் தேரோட்டம் நடைபெறும் 4 ராஜ வீதிகளில் மேள, தாளங்கள் முழங்க முருகப்பெருமானின் வேல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ----
Next Story