நாள் முழுதும்பெய்த மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி
Komarapalayam King 24x7 |12 Dec 2024 2:50 PM GMT
குமாரபாளையத்தில் நாள் முழுதும் பெய்த மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிகாலை முதல் நாள் முழுதும் மழை பெய்தது. சாலையோர கடைகள் போட்டு இருந்தாலும், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வியாபாரிகள், வியாபாரம் இல்லாமல் அவதிக்கு ஆளாகினர். சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. கோம்பு பள்ளத்தில் அதிக அளவில் மழை நீர் சென்றது. தொடர்ந்து மழை பெய்ததால் குளிர் நிலவியது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சாயம் போட்ட நூல்கள் காய வைக்க முடியாததால் சாயப்பட்டரையினர் தவிப்புக்கு ஆளாகினர்.
Next Story