தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
Sankarankoil King 24x7 |12 Dec 2024 3:25 PM GMT
தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
இந்திய வானிலை மையத்திலிருந்து வடகிழக்கு பருவமழையினால் தென்காசி மாவட்டத்திற்கு 13.12.2024 அன்று ஒரு நாள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும், ஆறு மற்றும் குளங்களில் நீர்வரத்து அதிகமாக வாய்ப்பு உள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் உரிய எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருந்திட அறிவுறுத்தப்படுகிறது. தெரியாத ஆழமும் நீரோட்டமும் உள்ள தண்ணீருக்குள் செல்ல வேண்டாம். 13.12.2024 அன்று இடி, மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதால் விவசாய தொழிலாளர்கள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள், இடி மின்னலின் போது வெட்ட வெளியில் நடக்க வேண்டாம் என்றும், மரங்களுக்கு கீழ் பாதுகாப்பிற்காக ஒதுங்க வேண்டாம் என்றும், பெருமழையின் போது காய்ச்சிய குடிநீரினையே பருகி நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது. மழையினால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077 அல்லது - 04633 - 290548 என்ற எண்களில் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர் இ.ஆ.ப., அவர்கள் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story