சின்ன உடைப்பு மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த சீமான்.
Madurai King 24x7 |12 Dec 2024 3:56 PM GMT
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக ஏற்பட்ட பிரச்சனைக்காக போராட்டம் நடத்தி வரும் சின்ன உடைப்பு மக்களை இன்று மாலை சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று (டிச.12) மாலை மதுரை வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலைய விரிவாக்க விவகாரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சின்ன உடைப்பு பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும் அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: சின்ன உடைப்பு மக்களின் முதல் மூன்று முக்கிய கோரிக்கைகள் 2013 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட இழப்பீடை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்கள், பரந்தூர் விமான நிலையத்தை போல இங்கு பிரச்சனை அல்ல அங்கு மக்கள் நிலத்தை கொடுக்கவே எதிர்க்கிறார்கள், ஆனால் இங்குள்ள மக்கள் நாங்கள் நிலத்தை கொடுத்து விடுகிறோம் ஆனால் அதற்கு எங்களுக்கு மீள்குடி அமர்வு செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள் அதற்கு இடத்தை அவர்களே தேர்வு செய்து கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். 60, 70 ஆண்டுகளாக இங்கு இருப்பவர்களை ஒரே நாளில் இடம் மாற்றுவது நார்த்தங்காயிலிருந்து செடியை பறித்து வேறு இடத்தில் நடுவதை போல உள்ளது, சொந்த ஊரிலேயே அகதிகளாக வேறு இடத்திற்கு செல்வதை போல தான். வருபவர்களுக்கெல்லாம் நிலத்தை வெட்டி தொழிற்சாலை தொடங்க இடம் தரும் அரசுகள் இதை செய்வதில் என்ன சிரமம். அன்றைய தேதிக்கு குறைந்த அளவுக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. பரமபட்டி போல முத்துர கிராமங்களில் நிலத்தை எடுத்து மாற்றி வீடு கட்டி கொடுத்தது போல எங்களுக்கும் என்றும் சொல்கிறார்கள். சமுதாய ரீதியாகவும் மக்கள் குற்றச்சாட்டு வைப்பது குறித்த கேள்விக்கு அதுவும் எதார்த்தம் தானே குறளற்ற வலிமை இல்லாதவனை நசுக்குவதுதான் இவர்களின் வழக்கம். சான்றாக சொல்ல வேண்டும் என்றால் தூத்துக்குடி, சென்னை, கடலூரில் மட்டும் ஏன் நச்சு ஆலைகளுக்கு இடம் எடுக்கப்படுகிறது. பல்லாயிரம் ஏக்கர் நிலைமைக்கு விவசாயம் செய்யும் முதலாளிகளின் நிலத்தை தொடுவதில்லை ஏன். திண்டுக்கல்லில் சூரிய ஒளி திட்டத்திற்கு பட்டா நிலங்களை கூட கைய படுத்தினார்கள். அவர்களெல்லாம் கூண்டுக்குள் இருக்கும் சேவலாக இருக்கிறார்கள். கூரை மேலிருந்து கூவுவதற்கு அவர்களுக்கு சேவல் இல்லை. ஆனால் இதற்காகவே எங்கள் அப்பாவும், அம்மாவும் இல்லை நேந்து விட்டிருக்கிறார்கள். நான் என்ன ஆனாலும் நிற்பேன். என்னை தாண்டி தான் அவர்களை தொட முடியும். அவர்கள் மாளிகை கட்டி கொடுக்க சொல்லவில்லை கொடுத்த இடத்திற்கு பதிலாக மூன்று சென்ட் இடத்தில் வீடு கேட்கிறார்கள். ஏர்போர்ட்டை விரிவாக்கம் செய்தால் நாடு வளர்ந்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பறப்பதற்கு விமானம் இல்லை. காலை 11 மணிக்கு கிளம்பி தற்போது நாலு மணிக்கு வந்துள்ளேன். பறப்பதற்கு விமானம் இல்லை இந்த விரிவாக்கம் எதற்காக. மற்ற இனங்களுக்கும் எப்போதாவது போராட்டம் வாழ்க்கையில் இருக்கும் ஆனால் எங்களுக்கு வாழ்க்கையை போராட்டமாக மாறிவிட்டது என்று எங்கள் தலைவர் போராட்டத்தின் போது சொன்னார். தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
Next Story