தைப்பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க கூட்டத்தில் தீர்மானம்

தைப்பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க கூட்டத்தில் தீர்மானம்
X
பொங்கலூர் அருகே தைப்பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க கூட்டத்தில் தீர்மானம்
பொங்கலூர் அருகே உள்ள அழகு மலையில் ஜல்லிக்கட்டு நடத்துவது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் அழகுமலை மலைப்பாளையத்தில் உள்ள தலைவர் தோட்டத்தில் நடந்தது. ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்தின் தலைவர் லீடர் டேப் பழனிச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் சுப்ரமணியம், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் துணைச் செயலாளர் பவித்ரா அர்ஜுனன் ஆகியோர் முன்னிலை வகித்தன.ர் துணைத் தலைவர் மூர்த்தி, துணைச் செயலாளர் செந்தில்குமார், பெருந்தொழுவு ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், அதிமுக திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் முருகேசன், திமுக பெங்களூர் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளரும் ஜல்லிக்கட்டு இளைஞர் அணி செயலாளருமான கௌரிசங்கர், ஜேபி ஜுவல்லரி ஜெயபிரகாஷ் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் ஜல்லிக்கட்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட அதிமுக வழக்கினைச் செயலாளர் வழக்கறிஞர் முருகேசன் ஜல்லிக்கட்டுக்கு எந்த தடை வந்தாலும் திருப்பூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று ஜல்லிக்கட்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் இந்த ஆண்டு சிறப்பாக ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக செயலாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
Next Story