விளையாட்டு அரங்கம் திறப்பு விழா

விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
X
விழா
திருக்கோவிலுார் கசுரா கார்டனில் மிடோ அரினா திறந்தவெளி கிரிக்கெட் மற்றும் புட்பால் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நடந்தது. திருக்கோவிலூர், கசுரா கார்டனில், மிடோ அரினா என்ற பெயரில், திறந்தவெளி கிரிக்கெட் மற்றும் புட்பால் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.உரிமையாளர் முரளி தலைமை தாங்கினார். தருண்வேல் வரவேற்றார்.முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி அரங்கை திறந்து வைத்து, விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க., மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.பி., ஆதிசங்கர், திருக்கோவிலுார் நகராட்சி சேர்மன் முருகன், தொழிலதிபர்கள் முருகன், கார்த்திகேயன், தியாகராஜன், கணேஷ், கோத்தம்சந்த், மகாவீர், முன்னாள் சேர்மன் கோவிந்தராஜ், பா.ஜ., மாவட்ட தலைவர் கலிவரதன், தி.மு.க., செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர செயலாளர் கோபி, அவைத் தலைவர் குணா, அ.தி.மு.க., மாநில எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி, நகர செயலாளர் சுப்பு, வழக்கறிஞர் ரஜினி, தொழிலதிபர்கள் கண்ணப்பன், செல்லபாண்டியன், அண்ணாதுரை, லோகு, அரகண்டநல்லுார் பேரூராட்சி தலைவர் அன்பு, திருக்கோவிலுார் நகர மன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story