வடிகால் இல்லாததால் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்

நங்கவரம் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மாடு விழுந்தான் பாறை 8 ஆவது வார்டில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம் போல் உள்ளது. சாலை ஓரங்களிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. முறையாக மழைநீர் வடிகால் அமைக்காததால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் அவதிப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தண்ணீர் தேங்கி தொற்றுநோய் ஏற்படும் முன்னரே போர்க்கால அடிப்படையில் நங்கவரம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story