விழுப்புரத்தில் காசநோய் கண்டறியும் முகாம் தொடக்கம்

விழுப்புரத்தில் காசநோய் கண்டறியும் முகாம் தொடக்கம்
X
அதிநவீன வாகனத்தை தொடங்கி வைத்த மாவட்ட சுகாதார அலுவலர்
விழுப்புரம் மாவட்டத்தில், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில், காசநோய் கண்டறியும் முகாம் துவங்கியது.முகாமை மாவட்ட காசநோய் அலுவலர் சுதாகர் தொடங்கி வைத்தார். அதிநவீன காசநோய் கண்டறியும் எக்ஸ்ரே வாகனத்தை மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.இந்திய மருத்துவர் சங்கம் திருமாவளவன், தங்கராஜ், சவுந்தரராஜன், காசநோய் மருத்துவ அலுவலர் நித்யா, ரோட்டரி சங்கம் மணி, ராஜூ, ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து 100 நாள்கள், இந்த அதிநவீன பரிசோதனை வாகனம், பல்வேறு கிராமங்களுக்குச் சென்று, பொது மக்களுக்கு காசநோய் பரிசோதனை செய்து, நோய் கண்டறியும் பணிகளை குழுவினர் மேற்கொள்ள உள்ளனர்.
Next Story