விக்கிரவாண்டியில் இருளையிட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது

X
விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி தாலுகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தாசில்தார் யுவராஜ், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராதாபுரம், கட்டப்பட்டு, மதுரப்பாக்கம், எம்.குச்சிபாளையத்தில் உள்ள 30 இருளர் குடும்பத்தினரின் வீட்டிற்கும் நேரில் சென்று வெள்ள நிவாரண உதவியாக அரிசி, மளிகை பொருட்கள், பாய், போர்வை ஆகியவற்றை வழங்கினார்.மண்டல துணை தாசில்தார் தட்சணாமூர்த்தி, தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், வி.ஏ.ஓ.,க்கள் கேசவன், ராஜா, ராஜேஷ், உதவியாளர்கள் சதீஷ் அரவிந்தன், அனந்தராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story

